நீதிமன்ற நிர்வாக கட்டிடம், சட்டத்தரணிகள் சங்க ஓய்வறை கட்டிடம் திறப்பும்
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிடத் திறப்பு விழா இன்று (14) சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி கலந்து கொண்டார். மேலும், கௌரவ அதிதிகளாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் பொறியியல் பிரிவின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் எஸ். ஏ.கே.சுபசிங்க, விசேட அதிதிகளாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் பொறியியல் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் பி.எஸ்.சி.கே.முணசிங்க, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரி.சஞ்சீவன், விசேட அதிதிகளாக மேல் நீதிமன்ற பதிவாளர் எஸ்.எச்.எஸ். ஹக்கீமுள்ளாஹ், மேல் நீதிமன்ற வலயக்கணக்காளர் ஏ.எல் நஜிமுடீன், மேல் நீதிமன்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றிப்கான் மற்றும் சங்க சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எச்.அறூஸ், செயலாளர் ஏ.எம்.நஸீல், பொருளாளர் எம்.எம்.எஃப். ஷாமிலா உட்பட சட்டத்தரணிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட சட்டத்தரணிகள் ஓய்வறையும் அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டதுன் சிநேகபூர்வ விருந்திலும் அதிதிகள் கலந்து கொண்டனர். சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் சங்க உப தலைவர் சட்டத்தரணி அன்வர் ஸியாத் அவர்களினால் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் எதிர்நோக்கும் நிரந்தர வாகனத் தரிப்பிட பிரச்சினைகளை விளக்கப்பட்டு மகஜரொன்றையும் கையளித்தார். இவற்றை ஆராய்ந்த நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் பொறியியல் பிரிவின் மேலதிக செயலாளர் இவற்றை நிவர்த்திக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக இங்கு உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாகக்கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ரி.கருணாகரன் தலைமையில் இடம்பெற்று அவர் இடமாற்றம் பெற்றுச்சென்று இப்போது மீண்டும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாக கடமையாற்றி வரும் சந்தர்ப்பத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
No comments: