News Just In

2/16/2025 03:02:00 PM

"வளமான பெற்றோர்களிடமிருந்து ஆற்றலுள்ள பிள்ளைகளை உருவாக்குதல்" ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு!

"வளமான பெற்றோர்களிடமிருந்து ஆற்றலுள்ள பிள்ளைகளை உருவாக்குதல்" ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு!


அபு அலா
"வளமான பெற்றோர்களிடமிருந்து ஆற்றலுள்ள பிள்ளைகளை உருவாக்குதல்" எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், அவர்களின் கணவர்களுக்குமான ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு அட்டாளைச்சேனை யாடே மண்டபத்தில் (15) இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் தொற்று நோயியல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் பசால், ஒலுவில் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தார் ஏ.எல்.அலாவுடீன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு, கர்ப்பகால ஊட்டச்சத்து சமநிலை முக்கியத்துவம்
அவர்களின் கிளினிக் வருகை, கணவர்களின் பங்களிப்பு மற்றும் குழந்தை பிறந்த பின்னர் தடுப்பூசி ஏற்றுதல் தொடர்பான அறிவுரைகளை
வழங்கி வைத்தனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சஹிலா இஸ்ஸடீனின் அறிவுரைக்கமைய இடம்பெற்ற இந்த ஒருநாள் கருத்தரங்கில் 200 இற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களும் அவர்களின் கணவர்களும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: