News Just In

2/18/2025 11:49:00 AM

பாடசாலை மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி; முல்லைத்தீவு பொலிஸ் உத்தியோகஸ்தர் நையப்புடைப்பு!

பாடசாலை மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி; முல்லைத்தீவு பொலிஸ் உத்தியோகஸ்தர் நையப்புடைப்பு



முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் , மதுபோதையில் சிவில் உடையில் அத்துமீறி நுழைந்து பாடசாலை மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்த நிலையில் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் மது போதையீல் முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்ட போது அங்கிருந்தவர்களால் நையப் புடைக்கப்பட்டுள்ளார்.


பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (17) மாலை 3 மாணவிகளுடன் இவ்வாறு தவறாக நடக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிர்ந்துபோன மாணவிகள் குறித்த விடயத்தை வெளியே கூறியதன் பின்னர், அங்கிருந்தவர்கள் த பொலிஸ் உத்தியோகத்தருடன் முரண்பட்டுள்ளனர்.

அதோடு இச்சம்பவம் குறித்து மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பெற்றோர்கள், குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்

No comments: