News Just In

1/04/2025 12:37:00 PM

லிட்ரோ எரிவாயு விலை குறித்த தீர்மானம்!

லிட்ரோ எரிவாயு விலை குறித்த தீர்மானம்



ஜனவரி மாதத்தில் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 2025 ஜனவரி மாதத்திற்கு தற்போதைய விலைகள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் (கொழும்பு மாவட்டம்) பின்வருமாறு...

* 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபா.

* 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபா.

2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபா

No comments: