News Just In

1/08/2025 08:29:00 AM

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த கடற்றொழிலாளர்களை மீட்ட இந்திய கடற்படை!

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த கடற்றொழிலாளர்களை மீட்ட இந்திய கடற்படை


இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த ஒன்பது கடற்றொழிலாளர்கள், மீட்கப்பட்டு இன்று நாகப்பட்டினத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

தமது கடற்றொழில் படகின் இயந்திரம் செயலிழந்ததால் இலங்கை கடல் எல்லைக்குள் சென்ற கடற்றொழிலாளர்களே, மீட்கப்பட்டு நாகப்பட்டினத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த படகு கடந்த 29ஆம் திகதியன்று கடலுக்கு தொழிலுக்காக சென்றநிலையில், டிசம்பர் 30 ஆம் திகதியன்று நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 145 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இந்தநிலையில், காற்றுடன் படகு மிதந்து முல்லைத்தீவு அருகே இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தது.

இதனையடுத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து இந்திய கடலோர காவல்படையினர் இந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படையினருக்கு தகவல் அளித்தனர்.

இதன்போது மனிதாபிமான அடிப்படையில், இலங்கை கடற்படை, குறித்த கடற்றொழிலாளர்களை சர்வதேச கடல் எல்லையை அடைய உதவியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

No comments: