News Just In

1/17/2025 12:46:00 PM

சற்று முன்னர் சிஐடியில் முன்னிலையானார் கோட்டாபய!

சற்று முன்னர் சிஐடியில் முன்னிலையானார் கோட்டாபய


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு(Gotabaya Rajapaksa) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) இருந்து அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதுகோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பின் பக்க வீதியால் அவர் திணைக்களத்திற்குள் சென்றுள்ளதாக  செய்தியாளர் தெரிவித்தார்.

கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: