News Just In

12/17/2024 02:10:00 PM

மாவையை நீக்கி கதிரையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டும் முக்கிய புள்ளி!

மாவையை நீக்கி கதிரையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டும் முக்கிய புள்ளி



தமிழரசுக் கட்சி தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்ட உடனே மத்திய குழு அல்லது பொதுச்சபையை கூட்டி மாநாட்டை நடாத்துவதற்கான தேவை இருக்கின்றது.

இந்த இடைவெளிக்கு இடையில் தொடர்ச்சியாக மாவை சேனாதிராஜா இருப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

எனினும், மாவை சேனாதிராஜாவின் கதிரையை கைப்பற்றுவதில் தொடர்ச்சியாக சி.வி.கே. சிவஞானம் தீவிரம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவஞானம் மற்றும் மாவை சேனாதிராஜா இவர்கள் இருவரும் வயதில் ஒத்தவர்களாகவும் அனுபவசாலிகளாகவும் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், நடைபெறும் விடயங்கள் அனைத்திற்கும் பின்னால் இருப்பவர் சுமந்திரன் என்ற எண்ணப்பாடு இருக்கலாம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்

No comments: