News Just In

12/20/2024 05:23:00 PM

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!


இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்



கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(20) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

இன்றைய தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 761,647 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,870 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 214,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலையானது 24,640 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 197,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,520 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கம் 208,000 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 191,400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 23,925 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

No comments: