News Just In

12/25/2024 11:25:00 AM

கத்தோலிக்க தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!

கத்தோலிக்க தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு


கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு திறந்த வெளி பார்வையாளர்களை காண விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், நத்தார் பண்டிகைக்காக 389 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

No comments: