சமூக நல விடயங்களில், மனிதாபிமான ரீதியாக சிறப்பாக இயங்கும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சுனாமி அனர்த்த தினத்தின் இருபதாவது நினைவு முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள சுனாமி நினைவு தின நிகழ்வும் குருதிக்கொடையும் நாளை (26) வியாழக்கிழமை மாளிகைக்காடு மத்தி தோணா வீதியில் அமைந்துள்ள ஜனாஸா நலன்புரி அமைப்பின் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.
சுனாமியில் மரணித்த ஸுஹதாக்களை நினைவு கூர்ந்து நடைபெறும் இந்த இரத்த தான முகாமை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன் உட்பட பிரமுகர்கள் பலரும் தொடங்கி வைக்கவுள்ளனர்.
இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் நாளை காலை 08.30 மணி முதல் குருதிக்கொடை வழங்க முடியும் எனவும் பெண்களுக்கு பிரத்தியோக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

No comments: