ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவிற்கு புதுடில்லியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான ஊடக சந்திப்பின் போது, பிரதமர் மோடி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இணைப்புத் திட்டங்கள் தொடர்பில் அதிக கரிசனையை வெளிப்படுத்தியிருந்தார்.
இரு நாடுகளுக்குமான இணைப்புத் திட்டங்கள் சமரசங்களுக்கு அப்பாற்றப்பட்டது என்பதையே மோடியின் கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன. அநுரகுமாரவின் உரையில் அனைத்தையும் அவர் வரவேற்றிருக்கின்றார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் தங்களின் வெற்றி புதியது என்பதைக் சுட்டிக் காட்டியிருக்கும் ஜனாதிபதி அநுர, இந்தியாவுடன் இணைந்து பயணிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
மோடி, தனதுரையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது ஆகிய விடயங்கள் தொடர்பில் அநுரகுமார திஸநாயக்கவுடன் கலந்துரையாடினார் எனவும் அநுரகுமார தலைமையிலான இலங்கை அரசாங்கம் இந்த விடயங்களை முன்னெடுக்குமென்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மாகாண சபை முறைமை பயனற்றது – அதனால், நாட்டுக்கு எந்தவொரு நன்மையும் இல்லையென்று கூறியிருந்த நிலையில், இந்தியப் பிரமதமர் மோடி, அநுரகுமாரவுடனான சந்திப்பின் போது, 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் மாகாண சபையை வலியுறுத்தியிருப்பதானது, புதுடில்லி தெளிவான செய்தியொன்றை வழங்கியிருக்கின்றது
No comments: