தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் சத்தியலிங்கத்திற்கு! எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பு
தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது கடந்ததேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றது.
விவாதங்களின் பின்னர் குறித்த தேசியபட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னிதேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த தீர்மானம் இவ்வாறு எடுக்கப்பட்டதாக யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்
11/17/2024 04:42:00 PM
Home
/
Unlabelled
/
தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் சத்தியலிங்கத்திற்கு! எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பு!
தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் சத்தியலிங்கத்திற்கு! எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: