கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து; ஒருவர் பலி : பலர் காயம்
கல்முனை சாய்ந்தமருதிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வேன் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (1) இரவு 08 மணியளவில் விபத்துக்குள்ளானது.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் சோமர்செட் வத்தை பகுதியில் எதிர் திசையில் இருந்து வந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனில் பயணித்த 17 பேர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லாரியின் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
எனினும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: