News Just In

11/30/2024 09:07:00 AM

யாழில் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவால் ஒருவர் கைது!

யாழில் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவால் ஒருவர் கைது!



யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் முகவரியில் வசிக்கும் மனோகரன் கஜந்தரூபன் என்ற நபர் யாழ்ப்பாணப் பயங்கரவாத பிரிவு அதிகாரிகளால் அவரது இல்லத்தில் வைத்து நேற்றைய தினம் (29-11-2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபரின் முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர் இன்றைய தினம் (30.11.2024) அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறு கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: