News Just In

11/05/2024 12:56:00 PM

சிங்கப்பூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

சிங்கப்பூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு




சிங்கப்பூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் திரு.பேட்ரிக் டேனியல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை நேற்று (04.11.2024) சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பான விபரங்கள் ஒளிபதிவு மூலம் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டதுடன் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறைக்கான போக்குவரத்து வசதி வாய்ப்புகள் தொடர்பாகவும் வடக்கு மாகாண அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகள் தொடர்பாகவும். தற்போதைய பொருளாதார நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் இருந்து உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தல் தொடர்பாகவும் வினவப்பட்டது. மீன்பிடி, விவசாயம், கால்நடைகளின் உற்பத்தி செயற்பாடுகள் தொடர்பில் உரையாடப்பட்டது.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு தடையாக உள்ள காரணிகளை எவ்வாறு வெற்றி கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

முன்னர் இடம்பெற்ற தவறுகளால் எமது நாடு முன்னேற்றம் அடையாமல் உள்ளது. திட்டமிடலை சரியாக நடைமுறைப்படுத்த பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து கொண்டுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவித்தார்

No comments: