News Just In

11/02/2024 04:49:00 PM

கருணா - பிள்ளையானுக்க அநுர தரப்பு பகிரங்க சவால்!

கருணா - பிள்ளையானுக்க அநுர தரப்பு பகிரங்க சவால்!



வரலாற்றில் முக்கியமான மாற்றத்திற்கு கிழக்கு மாகாணம் தயாராகி வருவதாகவும், கருணா - பிள்ளையான் யார் வந்தாலும் இதனை தடுக்க முடியாது எனவும், தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunnetti ) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மட்டக்களப்பில் பழைய அரசியல்வாதிகள் பழைய கதைகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அநுரகுமாரவை தெரியும் என இங்குள்ள அரசியல் தலைமைகள் கூறினாலும், அரசாங்கத்தில் அவர்களுக்கு இடமில்லை. குறிப்பாக மட்டக்களப்பில் பிள்ளையானின் அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது.

மேலும், அரசு சலுகைகளை பாவித்தே ரணில் விக்ரமசிங்க பிரசாரம் செய்து கொண்டார்.

அவ்வாறே சஜித் பிரேமதாசவும், பிரசார செயலை முன்னெடுத்திருந்தார்.



அவர்கள் ஆட்சி அமைக்க முடியாத காரணத்தால் மக்கள் மத்தியில் எங்களைப் பற்றி ஒரு பயத்தை உருவாக்கியிருந்தனர்.



ஜோன்சன் பெர்னான்டோ, லொஹான் ரத்வத்த போன்றோருக்கு, அதிகாரத்தின் மூலம் இனிமேல் களவாட முடியாது.

அவர்கள் நீதிக்கு முன்னால் வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இது ஆரம்பம் மாத்திரம்தான்.

No comments: