News Just In

11/24/2024 12:47:00 PM

நில்வளா கங்கையின் நீர்மட்டம் உயர்வு! - வெள்ள அபாய எச்சரிக்கை

நில்வளா கங்கையின் நீர்மட்டம் உயர்வு! - வெள்ள அபாய எச்சரிக்கை




நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நில்வலா கங்கையின் நீர் மட்டம் சற்று வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நில்வலா ஆற்றின் நீர் மட்டம் தலகஹகொட பிரதேசத்தில் சிறு வெள்ள மட்டத்தை கடந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பானதுகம பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த சிறு வெள்ளம் தற்போது குறைந்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: