News Just In

11/30/2024 06:32:00 AM

ஏழு வயதில் சதுரங்கப் போட்டியில் சாதித்த யாழ் தமிழ் சிறுமி..!

ஏழு வயதில் சதுரங்கப் போட்டியில் சாதித்த யாழ் தமிழ் சிறுமி..!




யாழ்ப்பாணத்தில் தமிழ் சிறுமி ஒருவர் எட்டு வயதில் சதுரங்கப் போட்டியில் சாதித்து சாதனை படைத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்ட சதுரங்க திறந்த போட்டியில் யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை சேர்ந்த செல்வி கஜீனா தர்ஷன் என்ற ஏழு வயது சிறுமி தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் 200 மாணவர்கள் பங்கு பற்றிய நிலையில் 7 வயது சிறுமியான கஜீனா தங்கப் பதக்கத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் சர்வதேச போட்டிகள் மற்றும் பொதுநலவாய போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்களை பெற்றுள்ளார்.

இதன் மூலம் சாதனைச் சிறுமியாக பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: