News Just In

11/08/2024 01:37:00 PM

இலங்கையின் தேசிய தேயிலை விற்பனையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையின் தேசிய தேயிலை விற்பனையில் ஏற்பட்ட மாற்றம்




இலங்கையின் தேசிய தேயிலை விற்பனை கடந்த ஒக்டோபர் மாதத்தில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த செப்டெம்பர் மாதத்தில் 1,207 ரூபாய் 99 சதமாகக் காணப்பட்ட ஒரு கிலோ கிராம் தேயிலை ஒக்டோபர் மாதத்தில் 1,172 ரூபாய் 15 சதமாகக் குறைவடைந்துள்ளது.

தேயிலை விற்பனையில் மாதாந்த தரவுகளின்படி வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்ற போதிலும்,

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் உயர்வைக்காட்டுவதாக இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.

No comments: