கடந்த 15 வருடமாக போராடி வருகின்றோம்!
கிழக்கு மண்ணை காப்பாற்றுவதற்காக மக்களுடன் இணைந்து கடந்த 15 வருடமாக போராடி வருகின்றோம் எனவே கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் அப்போது தான் கிழக்கை காப்பாற்ற முடியும் என இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை சந்தியில் நேற்று (06) மாலை சைக்கிள் சின்னத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கான கட்சி காரியாலயம் திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த தேர்தலை இது வரைக்கும் நடந்த தேர்தல் போல் எங்கள் மக்கள் கையாளக் கூடாது என ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகின்றோம். இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பமாக அமையப் போகின்ற இந்த தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களுடைய வாழ்வு. இந்த தீவில் ஒரு அடிமைத்தனமாக இருக்கப் போகின்றதா? அல்லது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சம உரிமையோட வாழப்போகின்றோமா? என்ற ஒரு கேள்வி எழுப்புகின்ற ஒரு தேர்தல் அமையப் பெற்றிருக்கின்றது.
வடக்கு, கிழக்கில் சைக்கிள் அணி மிகப் பெரும் பலமாக வந்து கொண்டிருக்கின்றது தென்பகுதியை பொறுத்தமட்டிலே ஒரு ஊழல் அற்ற நேர்மையான ஒரு அரச தலைவராக அநுர குமார திசாநாயக்காவை ஜனாதிபதியாக அந்த மக்கள் தெரிவு செய்துள்ளனர்.
ஆனால் வடகிழக்கிலே அவ்வாறான ஒரு தலைவரை இதுவரைக்கும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை ஆனால் இந்த தேர்தல் அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்கு கொடுத்திருக்கின்றது என தெரிவித்தார்
11/08/2024 01:41:00 PM
கடந்த 15 வருடமாக போராடி வருகின்றோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: