இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு; தண்ணீரில் மிதக்கும் கிளிநொச்சி நகரம்
வடக்கின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெருமளவான வெள்ள நீர் வெளியேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்வதனால் மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
அத்துடன் பலரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் இடைத்தங்கள் முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் 1043 குடும்பங்களைச் சேர்ந்த 3524 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வட்டக்கச்சி ஊடாக கண்டாவளை செல்லும் பிரதான வீதியில் புளியம்போக்கனை பகுதியில் வீதி குறுக்கரத்து வெள்ளம் பாய்வதன் காரணமாக பெரியகுளம் வட்டககச்சி செல்லும் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.
No comments: