News Just In

10/16/2024 01:18:00 PM

வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கல் இன்று!


நாடாளுமன்ற தேர்தல்; வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கல் இன்று




எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (16) பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களினதும் விருப்பப் பட்டியல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்பப்பட்டியல்களை சரிபார்த்து மாவட்ட செயலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவ‍ேளை, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகை இன்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளது.

அதேநேரம், பொதுத் தேர்தல் தொடர்பான உத்தரவுகளை அமுல்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது

No comments: