இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் ஸ்கை தமிழ் விருது -2024 நிகழ்வு ஸ்கை தமிழ், துணிந்தெழு பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ஜெ.எம். பாசித் தலைமையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் ஸ்கை தமிழ் விருது -2024 நிகழ்வில் ஊடகத்துறைக்கு சுமார் 15 வருடங்களாக ஊடகத்துறையில் களமாடி வரும், துணிச்சல் மிக்க இரண்டு ஊடகவியலாளர்கள் கௌரவம் பெற்றுள்ளனர். அதில் சிறந்த பிராந்திய நிருபராக எமது செய்தியாளர் நூருல் ஹுதா உமரும், புலனாய்வு அறிக்கையிடலுக்காக எமது செய்தியாளர் பாறூக் ஷிஹானும் விருது பெற்றனர்.
கடந்த வருடம் கட்டாரில் நடைபெற்ற இந்த விழா இரண்டாவது தடவையாக இலங்கையில் இம்முறை நடைபெற்றது. இந்த விருது விழாவில் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகரும், தொழிலதிபருமான புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத், கலை கலாச்சார பீடாதி பேராசிரியர் எம்.எம். பாஸில், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலர் உட்பட நிறைய பிரமுகர்கள் பலரும் கௌரவ, விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
No comments: