News Just In

10/27/2024 06:38:00 PM

நடிச்சோமா நாலு காசு பாத்தோமானு இருக்க நெனச்சேன், ஆனா.. அரசியலில் குதித்ததற்கு விஜய் சொன்ன காரணம்!


நடிச்சோமா நாலு காசு பாத்தோமானு இருக்க நெனச்சேன், ஆனா.. அரசியலில் குதித்ததற்கு விஜய் சொன்ன காரணம்


நடிகர் விஜய்யின் தவெக அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக இன்று நடந்து வருகிறது. அதில் பல லட்சம் பேர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

மேடையில் பேசிய விஜய் தான் அரசியலுக்கு வந்த காரணம் என்ன என்பது பற்றி பேசி இருக்கிறார்.

நடிச்சோமா நாலு காசு பாத்தோமானு இருக்கலாம்னு நெனச்சேன்.. ஆனா நாம மட்டும் நல்லா இருக்கனும்னு நினைக்குறது சுயநலம் இல்லையா. நம்மை வாழ வைத்த இந்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது விஸ்வசமாக இருக்குமா."

"ஒரு லெவலுக்கு மேல காசு சேத்து என்ன செய்ய போறோம். இந்த வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு என்ன தான் செய்ய போறோம். இப்படி ஏகப்பட்ட கேள்விகள் என் மனதில் வந்தது."

அதற்கு வந்த ஒட்டுமொத்தமாக பதில் கண்டுபிடிக்க யோசித்தபோது வந்தது தான் 'அரசியல்' என ஒரு விடை கிடைத்தது."

அரசியல் நமக்கு செட் ஆகுமா என பூதம் கிளம்பி வந்தது. பின்விளைவுகளை யோசிக்காமல் இறங்கி அடிச்சா தான் நம்மை நம்புபவர்களுக்கு நன்மை செய்ய முடியும் என மனதில் தோன்றியது. அதான் இறங்கியாச்சி. இனி எதை பற்றியும் யோசிக்க கூடாது" என விஜய் கூறி இருக்கிறார்.

No comments: