மாதாந்தம் ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு
வருடாந்த வருமானம் பன்னிரெண்டு இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வருமான வரிச் சட்டத்தின் பிரகாரம் வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடுகிறது.
ஆண்டு வருமானம் அல்லது இலாபம் பன்னிரெண்டு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
ஆனால் ஏற்கனவே பணம் செலுத்தக் கோரி பற்றுச்சீட்டுகள் கிடைத்திருந்தால், அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது
10/20/2024 03:49:00 PM
மாதாந்தம் ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: