News Just In

10/21/2024 06:41:00 AM

அக்கரைப்பற்று – பாலமுனை பிரதேசத்தில்போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது!

போலி நாணயத்தாள்களுடன் மட்டக்களப்பு நபர்கள் மூவர் கைது!





அக்கரைப்பற்று – பாலமுனை பிரதேசத்தில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – பாலமுனை பிரதேசத்தில் அக்கறைப்பற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையில், 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கார் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பிரதான சந்தேகநபருடன் காரில் பயணித்த மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைதான சந்தேகநபர்கள் 34, 43 மற்றும் 46 வயதுடைய களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: