இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வீடு டெல் அவிவின் வடக்கே சிசேரியாவில் ஹிஸ்புல்லா ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதலை பிரதம மந்திரியின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்போது நெதன்யாகுவும் அவரது மனைவியும் வீட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.
எனினும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முந்தைய அறிக்கையில், இஸ்ரேலின் இராணுவம் லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானம் செசரியா பகுதியில் உள்ள ஒரு கட்டமைப்பைத் தாக்கியது என்று கூறியுள்ளது.
No comments: