News Just In

10/21/2024 04:14:00 PM

யாழ். போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!

யாழ். போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!





இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 37வது ஆவது ஆண்டு இன்று நினைவு கூரப்பட்டது.

நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தனர். 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலைப் பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலரும் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சுடர் ஏற்றப்பட்டது.

No comments: