News Just In

9/15/2024 02:07:00 PM

முத்தமிழ் வித்தகரின் துறவற தின நூற்றாண்டு விழா!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், மற்றும் பிரதேச ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகள இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா (1924 -2024) சனிக்கிழமை(14.09.2024) பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்றது.



இவ்விழாவில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி கேமலோஜினி குமரன், அறநெறிப்பாடசாலை மாணவர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

களுவாஞ்சிகுடி மாணிக்க பிள்ளையார் ஆலய முன்றலில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான பண்பாட்டு ஊர்வலம் பிரதான வீதியூடாக பிரதேச செயலகத்தை அடைந்ததும், ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் அவர்களல் சுவாமி விபுலானந்தரின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்தல் மற்றும் பூஜை நிகழ்வுகளைத் தொடர்ந்து பிரதான ஏனைய நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கதாப்பிரசங்கம், பேச்சு, பாடல், நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் (அம்பாறை) கே.ஜெயராஜ் அவர்களினால் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற தினம் தொடர்பான விசேட ஆன்மீக சொற்பொழிவு என்பன இடம்பெற்றன

No comments: