(அஸ்ஹர் இப்றாஹிம்)
மத்திய மாகாண ரக்பி நடுவர் சங்கமும், மத்திய மாகாண ரக்பி சம்மேளனமும் இணைந்து மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி போட்டியில் மடவள மதீனா தேசிய கல்லூரி சம்பியனானது.
பல்லேகல திருத்துவ கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் மடவள மதீனா தேசிய கல்லூரி தலாது ஓயா தேசிய கல்லூரியை 31:7 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி கொண்டு ஷீல்ட் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
No comments: