News Just In

9/18/2024 01:30:00 PM

கிழக்கும் மலையகமும் சந்தித்த நட்பு கால்பந்தாட்ட சமர் சமனிலையில் முடிவு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

திருகோணமலை உதைபந்தாட்ட லீக்கின் ஒழுங்கமைப்பில் திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் திருகோணமலை உதைபந்தாட்ட லீக் அணியினருக்கும் ஹட்டன் உதைபந்தாட்ட லீக் அணியினருக்குமான நட்பு ரீதியிலான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

கால்பந்தாட்டப் போட்டியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் அடிப்டையில் சமநிலையில் நிறைவடைந்தது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இரு அணியினருக்கும் கிண்ணத்தை வழங்கி கௌரவித்தார்.

No comments: