(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அவர்களை ஆதரித்து சாய்ந்தமருது 21 ஆம் வட்டாரத்துக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் காரியாலயம் திறப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது 21 ஆம் வட்டார தலைவரும் ,முன்னாள் கல்முனை மாநகர சபை வேட்பாளருமான எம்.எம்.எம்.பாமி தலைமையில் அவருடைய இல்லத்தில் நடைபெற்றது .
இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளர்,ஏ.ஸி.சமால்தீன் , சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்,. அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், 21ம் வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்கள்,அதிபர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: