News Just In

9/15/2024 07:10:00 PM

யாழ்ப்பாணம் உருபராயூர் து. திலக் எழுதிய "சிதறல்கள் 100 "கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் உரும்பராயூர் து.திலக் எழுதிய "சிதறல்கள் 100" கவிதை நூல் தொகுப்பு வெளியீட்டு விழா திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

"கனக தீபகாந்தன்" அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திருகோணமலை முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.சீ.மதியழகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

எழுத்தாளரும் ஓய்வுநிலை ஆசிரியையுமான கிண்ணியா "சபீனா", சக்தி எஃப் .எம் நிறைவேற்று தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான திரு "டீ..செல்டன் அண்டனி"ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments: