News Just In

8/05/2024 08:20:00 PM

சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புக்களுக்கான வட்டி வீதத்தில் திருத்தம்?





சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புக்களுக்கான வட்டி வீதத்தை திருத்துவதற்கான தீர்வு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

இது தோடர்பான தீர்வு யோசனை அடங்கிய அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(Ranil Wickremesinghe) கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ருவன்வெல்ல பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பல சிரேஷ்ட பிரஜைகளின் முக்கிய வருமானம், அவர்களின் ஓய்வு காலத்தின்போது வழங்கப்படும் பணிக்கொடை அல்லது வங்கி வைப்புத்தொகை போன்றவற்றில் பெறப்படும் நிலையான வட்டியே ஆகும்.

கடந்த காலங்களில் நாட்டில் வங்கி வட்டி வீதத்தை குறைக்குமாறு கடன் பெற்றவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர், அதற்கமைய வங்கி வட்டி வீதமும் பொதுவாக கடன் வட்டி வீதத்தை குறைக்கும்போது குறைவடைந்துள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டபோது அரசாங்கம் குறிப்பிட்ட சதவீத வட்டியை சேர்த்து சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கியது. அதன்படி, ஒருபுறம், வங்கிகளுக்கு 88 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.

மறுபுறம், கிட்டத்தட்ட 15 லட்சம் கணக்கு வைத்திருப்பவர்கள் வட்டி விகிதத்தைக் குறைப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி இப்பிரச்சினைக்கு திறைசேரி வழங்கக்கூடிய பதில் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் சாதகமான பதில் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: