News Just In

8/13/2024 06:58:00 PM

ரணிலுடன் இணைந்தார் சஜித்தின் முக்கிய சகா!!



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (13) பிற்பகல் கொழும்பு கங்காராம விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பினனர் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மிக முக்கிய சகாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய ஆதரவை இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மீளப்பெற்றுள்ளதுடன், அவர் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் வாரம் வெளியிடப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: