News Just In

8/30/2024 11:26:00 AM

மட்டக்களப்பில் ‘நீதிக்கான பயணம்’ எனும் தொனிப்பொருளில் ஓவியக் கண்காட்சி!




வடக்கு-கிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகளின் குடும்பங்களில் உள்ள இளையோரின், ஏக்கங்களை வெளிப்படுத்தும்ஓவியக் கண்காட்சி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று நடைபெற்றது.

‘நீதிக்கான பயணம்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையில்இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியில் 150 இற்கு மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா, கண்காட்சியின் ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
பாடசாலை மாணவர்கள், பொது அமைப்பினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அங்கத்தவர்கள் என பலரும் கண்காட்சியில் கலந்துகொண்டனர்

No comments: