News Just In

8/13/2024 02:17:00 PM

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி தங்கமகன் பிருந்திகனுக்கு கல்வி சமூகம் கெளரவம்!

தேசிய மட்ட மல்யுத்தத்தில் தங்கம் வென்ற மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி தங்கமகன் பிருந்திகன் கல்வி சமூகத்தால் பாராட்டி கெளரவிப்பு



(எம்.எம்.ஜெஸ்மின்)
இலங்கை பாடசாலை மல்யுத்த சங்கத்தினால் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டுப் போட்டியின் ஒரு அங்கமான 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 97 கிலோகிராம் எடைப்பிரிவில் பங்குபற்றி மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மாணவன் பிருந்திகன் தங்கப் பதக்கம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கான கௌரவிப்பு நிகழ்வு கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

No comments: