News Just In

8/10/2024 11:46:00 AM

பொலிஸ் அதிகாரி என கூறி ஆசிரியை மீது தாக்குதல் ; காப்பாற்றச் சென்ற மாணவர்களும் காயம்!



பொலிஸ் அதிகாரி என கூறி கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்குச் சென்ற இனந்தெரியாத நபரொருவர் ஆசிரியை ஒருவரையும் 5 மாணவர்களையும் தாக்கி காயப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பொலிஸ் அதிகாரி என கூறி கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்குச் சென்ற இனந்தெரியாத நபரொருவர் அங்கிருந்த ஆசிரியை ஒருவரை பலமாக தாக்கியுள்ளார்.

இதன்போது,அங்கிருந்த மாணவர்கள் சிலர் ஆசிரியையைக் காப்பாற்ற முயன்ற போது சந்தேக நபர் அந்த மாணவர்களையும் தாக்கி காயப்படுத்தியுள்ளதோடு ஆசிரியையின் கையடக்கத் தொலைபேசி, பணம் மற்றும் நகைகளைத் திருடித் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்லேகுன்தெபான பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரும் 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 5 மாணவர்களுமே காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: