நூருல் ஹுதா உமர்
எமது வாக்கு நமது உரிமை என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது ஆனால் இம்முறை வருகின்ற தேர்தலில் எமது வாக்குரிமையை நமது கடமையாக நினைத்து வாக்களிக்க வேண்டிய நேரம் வருகின்றது. என்று அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்
அந்த செவ்வியில் தலைவன் சரியில்லை என்றால் அந்த சமூகமும் நாடும் சீரழிந்து விடும் என்பதற்கு எமது நாடு உலகிற்கு சிறந்த உதாரணமாகும். அதனால் சிறந்த சிந்தனையால் மக்களை சிறப்பாக வாழ வைக்கக்கூடிய நல்லொழுக்கம் உடைய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உரிய நேரம் நெருங்கி வந்துள்ளது. அதோடு தனக்கு வாக்களித்த மக்களை மறந்து நாட்டை சூறையாடிய அரசியல்வாதிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்குவதற்குரிய நேரம் நெருங்குகிறது என எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளதுடன் எமது சந்ததிகளின் எதிர்காலத்துக்காக கடமை உணர்வுடன் மக்கள் வாக்களிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments: