News Just In

8/07/2024 01:35:00 PM

மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் "ஆற்றுகைச் சாரல் " நிகழ்வு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

காரைதீவு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மாளிக்கைகாடு அல்- ஹுசைன் வித்தியாலய தரம் 11 மாணவர்களின் ஏற்பாட்டில் மாணவர்கள் மத்தியில் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாணவ மன்றம்"ஆற்றுகைச் சாரல்" பாடசாலை மண்டபத்தில் (6)இடம்பெற்றது.

பாடசாலைஅதிபர் ஏ. சீ. எம். நளீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அதிபர் திருமதி.ரிஸ்லியா உவைஸ் ,ஒழுக்காற்று சபை தவிசாளர் மெளலவி எம்.எஸ். சாதிக் , ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாடசாலை கலாச்சார குழுவின் வழிகாட்டலில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வினை ஒழுக்காற்று சபை செயலாளர் ஏ.எம்.எம்.. ரஜி ஆசிரியரோடு இணைந்து ஆசிரியை ஆர். ரஸ்மியா,விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.என்.எம். ஜஸாத் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.



No comments: