News Just In

8/01/2024 02:34:00 PM

தமிழ் அரசுக் கட்சி தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரின் வியூகத்துக்குள் சிக்கிவிட்டதா?


எந்தவொரு தென்னிலங்கை வேட்பாளரும் இதுவரையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் முன்னேற்றகரமான பதில்களை வழங்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தமிழ் பொது வேட்பாளர் ஒரே யொரு தெரிவாக தமிழ் மக்கள் முன்னால் இருக்கின்றது. ஆனால், இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. தனிநபர்கள் ஆதரவு என்னும் நிலையிலேயே தமிழ் அரசுக் கட்சியின் நகர்வு அமைந்திருக்கின்றது.

அவ்வாறாயின், தமிழ் அரசுக் கட்சி ரணிலின் வியூகத்துக்குள் சிக்கிவிட்டதா? தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருந்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் தற்போது ஓர் உடன்பாட்டுக்குள் இருக் கின்றன. இவ்வாறான கட்சிகள் தொடர்ந்தும் பயணிக்கும் உறுதிப்பாட்டுடன் இருக்கின்றன. ஒருவேளை இவ்வாறான கட்சிகளில் ஒரு கட்சியோ அல்லது சில கட்சிகளோ தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டிலிருந்து வெளியேறு மாயின் அவர்களும் ரணிலின் வியூகத்துக்குள் சிக்கிவிட்டனரா என்னும் கேள்வியே மேலோங்கும் அல்லது அவர்கள் சஜித்தின் வியூகத்துக்குள் சிக்கியிருக்க வேண்டும்.

தமிழ் பொது வேட்பளார் நிலைப்பாட்டை எதிர்ப்பதற்கான தர்க்க நியாயங்கள் எவரிடமும் இல்லை. இந்தப் பின்புலத்தில் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை தமிழ் அரசுக் கட்சி தொடர்ந்தும் எதிர்க்குமாயின், அது நிச்சயமாக தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரின் வியூகத்துக்குள் சிக்கிவிட்டதாகவே நோக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

No comments: