தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு கல்குடா தொகுதிக் கிளை அலுவலகம் இன்று, ஓட்டமாவடி பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் நியாஸ் ஹாஜியார் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைத்தியர் எம்.பி.எம்.அஜிவத், இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கிறிசன் பீரீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர். நாளைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்கா ஓட்டமாவடி பிரதேசத்திற்கு வருகை தரவுள்ளதால் அவரை வரவேற்கும் முகமான மக்கள் சந்திப்பும் இடம்பெற்றது.
No comments: