(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு பாடசாலைகளுக் கிடையிலான மாகாண மட்ட கராத்தே போட்டிகளில் கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி மாணவர்கள் 02 தங்கப்பதக்கங்களையும் , 08 வெள்ளிப்பதக்கங்களையும் , 03 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று கல்முனை வலயத்தில் முதல் இடத்தினை பெற்றுள்ளதோடு தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் நடை பெற்ற கிழக்கு மாகாண மட்ட கராத்தே போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், அவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் எஸ் .பாலுராஜ் அவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள், உதவி அதிபர்கள்,பிரதி அதிபர்கள் மற்றும் அதிபர் அவர்களுக்கும் பாடசாலை கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
No comments: