(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் வாகன கொள்வனவுக்கு நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் நிதி உதவி வழங்கியுள்ளார்.
கல்முனை யங்பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மூன்று இலட்சம் ரூபாய்க்கான காசோலையை இவர் வழங்கி வைத்தார்.
அண் மையில் அமைப்பின் கல்முனை அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்த பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் ஜனாஸா அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டு கோளை ஏற்று அதற்கான உதவியை விரைவில் செய்வதாக வழங்கிய வாக்குறுதிக்கமைய இந்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.
ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் கல்முனை மக்கள் சார்பாகவும் பொறியியலாளர் உதுமாங் கண்டு நாபீருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கல்முனையங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எம்.மர்சூக் குறிப்பிட்டுள்ளார்.
No comments: