News Just In

7/28/2024 07:18:00 PM

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திடீர் விஜயம்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையிலான குழு வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம்


(அஸ்ஹர் இப்றாஹிம்)
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பனவற்றிற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் தலைமையிலான குழுவினர் திடீர் விஜயமென்றை மேற்கொண்டடிருந்தனர்.

அங்கு உத்தியோகத்தர்கள் ஊழியர்களுடன் கலந்துரையாடி நிறுவனங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளை மதிப்பீடு செய்து அவற்றை தீர்ப்பதற்குரிய பொறிமுறைகள் தொடர்பிலும் ஆராய்ந்ததுடன் சிலவற்றை உடனடியாக தீர்த்தும் வைத்தனர்

குறித்த விஜயத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம் சீ எம் மாஹிர் அவர்களும் உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என் எம் இப்ஹாம் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்

No comments: