News Just In

7/23/2024 03:42:00 PM

வங்கிகளில் தங்க நகை அடகு வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!



வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு இவ்வாறு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் சமீபகாலமாக நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது.

இதன் விளைவாக தங்க நகைகளை அடமானம் வைக்கும் செயற்பாடு பொதுமக்களிடத்தில் வேகமாக அதிகரித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகளில் அடமான முன்பணம் பெற்ற குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

No comments: