மாளிகைக்காடு செய்தியாளர்
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கட்டிட மேல்தள வேலைகளுக்காக 05 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர், ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தை நம்பிக்கையாளர் சபையினரிடம் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ.நைசர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம். ஆசிக், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், சிரேஷ்ட ஆலோசகர் எம்.ஏ. கலீல் ரஹ்மான், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் ஏ.ஆர்.ஏ.அலியார் உட்பட உறுப்பினர்கள், ஜமாஅத்தினர், ஊர் மக்கள், கல்விமான்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments: