
வைத்தியசாலை மருந்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட ஒவ்வாமை
July 15, 2024 09:36 am
மிஹிந்தலை வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொண்ட சிறுவர்கள் பலர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சளி போன்றவற்றுக்கு மருந்து உட்கொண்ட சிறுவர்கள் குழு ஒன்றுக்கே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மிஹிந்தலை வைத்தியசாலையில் தேவையான மருந்தைப் பெற்றுக் கொண்டு பிள்ளைகளுக்கு மருந்தைக் கொடுத்த பின்னர் குழந்தைகளின் வாய் கோணி, நாக்கு வெளியேறி, கழுத்து வளைந்த நிலையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நோய்வாய்ப்பட்ட 9 சிறுவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த ஒவ்வாமை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
No comments: