News Just In

7/30/2024 02:10:00 PM

ஏன் இந்த தடுமாற்றம் ? மக்கள் அங்கலாய்ப்பு !


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் அளவுக்கதிகமாகவே தடுமாறுகின்றனர். தமிழ் பொது வேட்பாளரை கண்டு நிலைகுலைந்து போயிருக்கின்றனர். இதனால், என்ன பேசுவது – எவ்வாறு பேசுவதென்று தெரியாமல் தடுமாறுகின்றனர்.

தமிழ் பொது வேட்பாளரால் கொழும்பி லுள்ள தமிழர்களுக்கு ஆபத்து என்னும் ஒரு புதிய கதையை சாணக்கியன் கூறியிருக்கின்றார். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தங்களின் அரசியல் நிலைப்பாட்டைக் கூறுவதால், எவ்வாறு கொழும்பிலுள்ள தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர்? ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்ஷ பூச்சாண்டி காண்பிக்கப்பட்டது. ஆனால், அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர், தமிழ் மக்கள் முன்னர் வழங்கிய ஆணையை இந்த முயற்சி குழப்பிவிடும் என்னும் கதை சொல்லப்பட்டது. அதனையும் எவரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது கொழும்பு தமிழ் மக்களுக்கு ஆபத்தென்று இன்னொரு கதை கூறப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக எதற்காக தமிழ் அரசுக் கட்சியின் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தளவு முட்டிமோதுகின்றனர்?

இதனை தமிழ் அரசுக் கட்சி தடுக்காமல் இருப்பது இன்னும் தவறானது. உண்மையில், தென்னிலங்கை வேட்பாளர்கள்தான் தமிழ் பொது வேட்பாளரை கண்டு அதிகம் கலக்கமடைய வேண்டும். ஆனால், தமிழ் அரசு கட்சியை சேர்ந்தவர்கள்ஏன்அதிகம்கலக்கமடைகின்றனர்என மக்கள் அங்கலாய்கின்றனர் 

No comments: