News Just In

7/23/2024 08:48:00 PM

நிரந்தர நியமனம் பெற்ற சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்களுக்கு பயிற்சிப்பட்டறை!



(எம்.எம்.றம்ஸீன்)

சம்மாந்துறை பிரதேச சபையில் பதிலீட்டு அடிப்படையில் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் அண்மையில் நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்நிரந்தர நியமனத்தைப் பெற்ற ஊழியர்களுக்கு அலுவலக நிர்வாக நடைமுறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான பயிற்சிப்பட்டறை சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் பிரதான அலுவலக கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிறு (21) இடம்பெற்றது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.சுல்பா உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

No comments: